Tuesday, October 6, 2015

கந்தாடை ராமானுஜமுனி பாகம் - 2

கந்தாடை ராமானுஜமுனி பாகம் - 2

வீரகம்பன்ன உடையார் (விஜயநகர் பேரரசு )மதுரை சூல்தான்களை வென்று தமிழகத்தை நேர் படுத்தினார். இவர் காலத்தில் தென் இந்தியாவின் பல பகுதிகளை  “மஹா மண்டலேஸ்வரர்கள் “ என்கிற பெயரில் அந்ததந்த பகுதி அரசர்கள் விஜய நகர அரசுக்கு கப்பம் கட்டி ஆண்டு வந்தனர்கள் ..(State governments) அவர்களில் ஒருவனே சாளுவ நரசிம்மன் .

சாளுவ நரசிம்மன் 1485 ஆண்டு விஜயநகர பேரரசாரனாக தன்னை முடிசூட்டிக்கொண்டான் .. நாம் முன்னமே பார்த்தது போல 1489 AD (சௌமிய வருடம் ) அவரது சகோதரர் ராமராசு என்கிற கந்தாடை ராமானுஜ முனி ஸ்ரீரங்கத்திற்கு வந்தார்..

ராமானுஜ முனி பற்றி கோவில் ஒழுகு சொல்லும் செய்தியில் ஒரு விசயம் குறிப்பிடபடுகிறது .. 

“அகளங்கன் திருமதில் கீழ்கோபுரத்தில் ....... நிலைக்காலிலே கோனேரிராஜா நாளையில் அந்த கோபுரத்தில் ஏறி விழுந்த ஜீயர்களையும் எகாங்கிகளையும் உருகலாகப்பிடித்து எழுத்தும் வெட்டு வித்து .... “ 

ராமானுஜமுனி ஸ்ரீரங்கம் வந்த காலத்தே தமிழகத்தை ஆண்டு வந்தவன்  கோனேரி ராஜா என்கிற அரசன்.

அவன் முழுமையாக சோழ மற்றும் பாண்டிய தேசம் அனைத்தையும் ஆண்டு வந்த அரசன் .. தன்னை போன்ற ஒரு மண்டலேஷ்வரன் அரனசனாகியா விஜயநகர  சாளுவ நரசிமனுக்கு கப்பம் கட்ட விரும்பவில்லை!! இவன் சங்கமகுல விஜயநகர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டு வந்தவன் .. (Sangama Dynasty 1336- 1485)


 ஸ்ரீரங்கம் கோவிலுக்கு உண்டான நிலங்களை பலருக்கு குத்தகைக்கு விட்டும் .. கோவில் கருவூலத்தில் இருந்த பல ஆபரணங்களை பல வரிகளை விதித்து அபகரித்துக்கொண்டான் !! 

இதனால் வருத்தம் உற்ற அழகியமணவாள தாசர் என்கிற ஒரு எகாங்கியும் ரெண்டு ஜீயர்களும் வெள்ளை கோபுரம் மீது ஏறியும் ... 

அப்பவையங்கார் என்கிற ஒரு ஏகாங்கி நமது இன்றைய ராஜகோபுரமும் ..அன்றைய தின மொட்டை கோபுரம் மீது இருந்தும் குதித்து உயிர் துறந்தனர் !!






இந்த கோனேரி ராஜ வைணவ விரோதி என்று நிச்சியமாக கொள்ளமுடியாது என்பது இரண்டு கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது !! 

(ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண் 345-346 AR NO.13 of 1938-390 



திருவரங்கத்தில் கார்த்திகை கோபுரவாசல் கதவுகள் அளித்து பல கொடைகள் அளித்திட்ட அவன் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு படித்தானம் அளிக்காமல் செய்தான் என்பது .. அவனுக்கும் ராமானுஜ முனிக்கும் ஏற்பட்ட அரசியல் சண்டையே என கருத தோன்றுகிறது !! 
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய காலம் சௌமிய வருடம் (1489) அந்த வருடத்தில் தான் அனைவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்து இருக்கிறார்கள்!!! அதுதான் ராமானுஜ முனி ஸ்ரீரங்கத்திற்கு வந்த வருடம் !! 

ராமானுஜ முனி தனது சகோதரனின் படைத்தளபதிகளை அழைத்து கோனேரி ராஜனை சண்டையில் வென்று .. கொன்று .. தமிழ் அரசர்களின் ஆளுமையை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார் !! கோனேரி ராஜனே கடைசி தமிழ் ராஜா என்று நினைக்கிறேன் .. அதற்கு பிறகு நாயக்கர் ஆட்சி ஆரம்பித்தது!!

ராமானுஜ முனியின் சமய மற்றும் சமுதாய பணிகள் பற்றி பார்ப்போம் !! 

No comments:

Post a Comment