Tuesday, October 6, 2015

கந்தாடை ராமானுஜமுனி பாகம் - 2

கந்தாடை ராமானுஜமுனி பாகம் - 2

வீரகம்பன்ன உடையார் (விஜயநகர் பேரரசு )மதுரை சூல்தான்களை வென்று தமிழகத்தை நேர் படுத்தினார். இவர் காலத்தில் தென் இந்தியாவின் பல பகுதிகளை  “மஹா மண்டலேஸ்வரர்கள் “ என்கிற பெயரில் அந்ததந்த பகுதி அரசர்கள் விஜய நகர அரசுக்கு கப்பம் கட்டி ஆண்டு வந்தனர்கள் ..(State governments) அவர்களில் ஒருவனே சாளுவ நரசிம்மன் .

சாளுவ நரசிம்மன் 1485 ஆண்டு விஜயநகர பேரரசாரனாக தன்னை முடிசூட்டிக்கொண்டான் .. நாம் முன்னமே பார்த்தது போல 1489 AD (சௌமிய வருடம் ) அவரது சகோதரர் ராமராசு என்கிற கந்தாடை ராமானுஜ முனி ஸ்ரீரங்கத்திற்கு வந்தார்..

ராமானுஜ முனி பற்றி கோவில் ஒழுகு சொல்லும் செய்தியில் ஒரு விசயம் குறிப்பிடபடுகிறது .. 

“அகளங்கன் திருமதில் கீழ்கோபுரத்தில் ....... நிலைக்காலிலே கோனேரிராஜா நாளையில் அந்த கோபுரத்தில் ஏறி விழுந்த ஜீயர்களையும் எகாங்கிகளையும் உருகலாகப்பிடித்து எழுத்தும் வெட்டு வித்து .... “ 

ராமானுஜமுனி ஸ்ரீரங்கம் வந்த காலத்தே தமிழகத்தை ஆண்டு வந்தவன்  கோனேரி ராஜா என்கிற அரசன்.

அவன் முழுமையாக சோழ மற்றும் பாண்டிய தேசம் அனைத்தையும் ஆண்டு வந்த அரசன் .. தன்னை போன்ற ஒரு மண்டலேஷ்வரன் அரனசனாகியா விஜயநகர  சாளுவ நரசிமனுக்கு கப்பம் கட்ட விரும்பவில்லை!! இவன் சங்கமகுல விஜயநகர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டு வந்தவன் .. (Sangama Dynasty 1336- 1485)


 ஸ்ரீரங்கம் கோவிலுக்கு உண்டான நிலங்களை பலருக்கு குத்தகைக்கு விட்டும் .. கோவில் கருவூலத்தில் இருந்த பல ஆபரணங்களை பல வரிகளை விதித்து அபகரித்துக்கொண்டான் !! 

இதனால் வருத்தம் உற்ற அழகியமணவாள தாசர் என்கிற ஒரு எகாங்கியும் ரெண்டு ஜீயர்களும் வெள்ளை கோபுரம் மீது ஏறியும் ... 

அப்பவையங்கார் என்கிற ஒரு ஏகாங்கி நமது இன்றைய ராஜகோபுரமும் ..அன்றைய தின மொட்டை கோபுரம் மீது இருந்தும் குதித்து உயிர் துறந்தனர் !!






இந்த கோனேரி ராஜ வைணவ விரோதி என்று நிச்சியமாக கொள்ளமுடியாது என்பது இரண்டு கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது !! 

(ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண் 345-346 AR NO.13 of 1938-390 



திருவரங்கத்தில் கார்த்திகை கோபுரவாசல் கதவுகள் அளித்து பல கொடைகள் அளித்திட்ட அவன் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு படித்தானம் அளிக்காமல் செய்தான் என்பது .. அவனுக்கும் ராமானுஜ முனிக்கும் ஏற்பட்ட அரசியல் சண்டையே என கருத தோன்றுகிறது !! 
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய காலம் சௌமிய வருடம் (1489) அந்த வருடத்தில் தான் அனைவரும் தற்கொலை செய்து கொண்டு இறந்து இருக்கிறார்கள்!!! அதுதான் ராமானுஜ முனி ஸ்ரீரங்கத்திற்கு வந்த வருடம் !! 

ராமானுஜ முனி தனது சகோதரனின் படைத்தளபதிகளை அழைத்து கோனேரி ராஜனை சண்டையில் வென்று .. கொன்று .. தமிழ் அரசர்களின் ஆளுமையை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார் !! கோனேரி ராஜனே கடைசி தமிழ் ராஜா என்று நினைக்கிறேன் .. அதற்கு பிறகு நாயக்கர் ஆட்சி ஆரம்பித்தது!!

ராமானுஜ முனியின் சமய மற்றும் சமுதாய பணிகள் பற்றி பார்ப்போம் !! 

Saturday, October 3, 2015

கந்தாடை ராமானுஜமுனி பாகம் - 1




கந்தாடை ராமானுஜமுனி பாகம் - 1


"Rome Was Not Built In A Day" என்று சொல்வதை போல நமது அரங்கமாநகர் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக பல மன்னர்களால் கட்டப்பட்டது ..

தற்போது (2015) ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் மிகப்பெரிய புணரமைப்பு போன்றே கந்தாடை ராமனுஜமுனியும் பல்வேறு திருப்பணிகளை செய்து வைத்தார் ...

துலுக்கர்களின் கலாபகத்திர்க்கு பிறகு (1322-1371) ஸ்ரீரங்கம் பெருமளவில் பாழ்பட்டு கிடந்தது .. வீரகம்பண்ணஉடையார் மனைவி கங்காதேவி “மதுராவிஜயம்” என்கிற நூலில் அரங்கனின் கோவில் எப்படி இருந்தது என்பது பற்றி விவரனாமாக சொல்லி இருப்பார்!!

பெரிய பெருமாள் .. ஆதிசேஷன் தலை கவிழ்ந்து மழையில் இருந்து காத்து கொண்டு இருந்தமை ..(ரெங்க விமானத்தை தகர்த்து உள்ளே இறங்கி பொன் தேடிய கள்வர்களால் .. முன்புறம் கல்திரை இட்டபடியால்!! )  போன்ற பல துர்சம்பவங்கள் விவரிக்கப்பட்டு இருக்கும்..

விஜயநகர பேரராசின் சாளுவ குல அரசன் வீரனரசிம்மனின் மூத்த சகோதரனான ராமராஜு என்கிறவரே இவர்...

 முதலில் வடக்கே அயோத்தியாபுரி சென்று அனுமத்உபாசனை செய்து “அயோதியாதாசர்’” என்கிற திருநாமம் கொண்டு இருந்தார் .(ஸ்ரீரங்கத்தில் அதே பெயரிலே கல்வெட்டுக்கள் சில உள்ளன)

தனது சகோதரனிடம் முத்திரை அதிகாரம் பெற்று திருப்பதி காஞ்சீபுரம் கோவில்களில் பெருமாளுக்கு ராமர் திருவுருவம் பதித்த பொற்காசுகளை சமர்ப்பித்து, அந்த திவ்யதேசங்களை தனது சகோதரனின்  ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தார்..



இவர் நமது ஸ்ரீரங்கத்திற்கு 1486 ஆண்டு 
எழுந்தருளினார்... இவருக்கு அரச ஆணை இருந்தபடியால், ஆஞ்சநேய முத்திரை (அது ஒரு சிறந்த அதிகார சின்னம் )  வழங்கப்பட்டு .. பல பொறுப்புகளை ஏற்று திறம்பட நிர்வாகம் செய்து வந்தார் ..

ஸ்ரீரங்கத்தில்.. இவர் பல காலும் விரும்பி அடிபணிய நினைத்த மணவாளமாமுனிகள் முன்னமே திருநாட்டை அலங்கரித்த படியால், கோவில் கந்தாடை அண்ணன் சுவாமிகளின் திருவடிகளை அடிபணிந்து தாஸ்ய நாமம் .. அதாவது எனது ஆசான் இவரே என்னும் பொருள் பட “கந்தாடை இராமானுஜமுனி” பெயரையும் பெற்றார்.

இவரின் சீரிய பணியால் .. கொறட்டு மணியக்காரருக்கு (கடந்த வருடம் வரை ஏலத்தில் சென்ற இந்த பணி இன்று கோவில் ஊழியக்காரர் ஒருவர்  செய்கிறார் ) அடுத்த படியாக தீர்த்தம் மரியாதை பெறுகிற கந்தாடை ராமானுஜமுனிக்கும் அவரின் பட்டத்தை அலங்கரிக்கின்ற சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ஏற்பட்டது.

இவரின் இந்த  பதவி 1942 க்கு பிறகு யாரும் அலங்கரிக்கவில்லை அதனால் பிராமணர் அல்லாதவருக்கு உண்டான இந்த உயரிய மரியாதையை  யாவரும் பெறுவதில்லை .. இதை பற்றி பின் வரும் நாளில் பார்ப்போம்!!

இவரின் பல திருப்பணிகளில் ஒன்று, ஸ்ரீரங்கம் மேல் புறம் உள்ள தெப்பக்குளத்தின் நடுவில் இருக்கும் மண்டபத்தை கட்டுவித்து தொப்போஸ்த்தவத்தை நெறிப்படுத்தியது..

இவர் புதிதாக இரண்டு கட்டை கோபுரங்கள் (தெற்கு மற்றும் வடக்கு ) நமது தெற்கு வாசல்  ராஜகோபுரத்தை அடுத்த மற்றும் வடக்கு வாசல் அடயவலஞ்சான் வீதி, சித்திரை வீதி நடுவில் உள்ளவை ..புதிதாக கட்டு வித்தார் !!!

நாம் முன்னமே பார்த்த மாதிரி இவர் ஸ்ரீரங்கத்திற்கு வருவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பாக .. ஸ்ரீரங்கம் சுமார் ஒரு ஐம்பது ஆண்டுகள்  துலுக்கர்களால் பாழ் பட்டு இருந்ததும் .. இவர் காலத்தில் பல மதில் சுவர்கள் இடிந்து கிடைத்தவற்றை இவர் சரி செய்தததும் தெரிக்கிறது ..

அதில் கீழ் புறம் உள்ள வெள்ளைகோபுரம் முழுமையாக இடிந்து கிடந்ததை சீர் அமைத்து திரும்பவும் எடுத்துக்கட்டினார் ..



இந்த வெள்ளை கோபுர நிலைகாலில்(pillars on both sides inside the gopuram) இரண்டு ஜீயர்கள் சிலைகளை அமைத்தார் ..

அதன் சரித்திரம் பற்றி நாளை பார்ப்போம் ..